தொல்லியல்
-

மறுகட்டுமானம் என்ற சொல்லுக்கு, சேதமடைந்த அல்லது தகர்க்கப்பட்ட கட்டடங்களை மீண்டும் கட்டுவது என்பது பொதுவான பொருளாகும். எனினும், இச்சொல்லானது சூழமைவு, பரப்பளவு, அழிக்கப்பட்டதற்கான காரணங்கள் ஆகியவற்றைப் பொறுத்து, மிகவும் வேறுபட்ட சூழல்களையும் குறிக்கிறது. என்றாலும், சமுதாயங்கள் தங்களுடைய மரபு கட்டடங்களில் சில கூறுகளைச் சீரமைக்கவோ மீண்டும் கட்டவோ அவற்றைத் தூண்டுவது என்னவென்று அச்சொல் எதையும் குறிக்கவில்லை. ப்ரான்கா மால்செர்வீசி – கட்டடக் கலை ஆலோசகர், விரிவுரையாளர் மற்றும் ஆராய்ச்சியாளர், தேசிய கட்டடக்கலைப் பள்ளி, வெர்சாய்ஸ் (பிரான்ஸ்) மரபுக்…
-
நெடுங்காலமாக நிலவிவரும் கருத்துகளின்படி, மனித சமுதாயங்கள் அதன் தொடக்கத்தில் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வந்த சமத்துவம் கொண்ட குழுக்களாக ஒருங்கிணைந்து இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தன. கால்நடை வளர்ப்பும் வேளாண்மையின் மேம்பாடும்- அதன் விளைவான செல்வச் சேர்க்கையும்- சிக்கலானதும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டதுமான சமுதாயங்கள் உருவாவதற்கு இட்டுச் சென்றன. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஒப்பீட்டுத் தொல்லியல் துறைப் பேராசிரியரான டேவிட் வென்க்ரோவ், மனித சமுதாயங்களின் இயல்பான பரிணாமம் குறித்த இந்தக் கருத்தை மறுக்கிறார். மானுடவியலாளர் டேவிட் க்ராபேருடன் இணைந்து…
-
மைக்கேல் மார்ஷல் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘டெவன்’ ஏட்டின் அறிவியல் இதழாளர். ‘தி ஜெனிஸிஸ் க்வஸ்ட்’ (2020) நூலின் ஆசிரியர். கண்டறிதல்களையும் புதிய பார்வைகளையும் அடிப்படையாகக் கொண்ட அறிவியல்பூர்வமான முன்னேற்றமானது நிலைபெற்றுவிட்ட நம்பிக்கைகளைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிவருகிறது. அதற்கு, தொல்லியல் துறையும் விதிவிலக்கு அல்ல. வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த காலத்தில், அவர்களிடையே நுண்ணறிவுத்திறன் குறைவாக இருந்தது அல்லது வேளாண்மைக்கும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கும் இடையே காரண-காரியத் தொடர்புள்ளது என்பன போன்ற நீண்ட கால கருத்துகளை இப்போது மறு ஆய்வு செய்ய…