சமூகம்
-

அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ‘அலெக்ஸ் இன் ஒண்டர்லேண்ட்’ ஸ்டேண்ட் அப் காமெடி நிகழ்ச்சி ஒளிபரப்பான பின்னர் அலெக்ஸ் என்னும் பெயர் சமூக ஊடகத் தளத்தில் முன்வரிசையில் வந்து நின்றது. யாரிந்த அலெக்ஸ் என்பதை அறிந்துகொள்ளும் ஆர்வத்தை ஏற்படுத்தியது இந்நிகழ்ச்சி. தனது நகைச்சுவை நிகழ்ச்சிக்கு அலெக்ஸ் எடுத்துக்கொண்ட திரைப்படப் பாடல்கள் என்னும் களம் பழையது என்றபோதும், களத்தை அவர் கையாண்டவிதம் மிகவும் புதுமையானது. தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, பலகுரல் மன்னர்கள் மூர்த்தி கோபி எனும் இருவர் புகழ்பெற்ற பாடல்களில்…
-
நெடுங்காலமாக நிலவிவரும் கருத்துகளின்படி, மனித சமுதாயங்கள் அதன் தொடக்கத்தில் வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வந்த சமத்துவம் கொண்ட குழுக்களாக ஒருங்கிணைந்து இயற்கையுடன் இயைந்து வாழ்ந்தன. கால்நடை வளர்ப்பும் வேளாண்மையின் மேம்பாடும்- அதன் விளைவான செல்வச் சேர்க்கையும்- சிக்கலானதும் அதிகாரப் படிநிலைகளைக் கொண்டதுமான சமுதாயங்கள் உருவாவதற்கு இட்டுச் சென்றன. லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியின் ஒப்பீட்டுத் தொல்லியல் துறைப் பேராசிரியரான டேவிட் வென்க்ரோவ், மனித சமுதாயங்களின் இயல்பான பரிணாமம் குறித்த இந்தக் கருத்தை மறுக்கிறார். மானுடவியலாளர் டேவிட் க்ராபேருடன் இணைந்து…
-
காதல் திரைப்படங்கள் தமிழுக்குப் புதிதல்ல. காதல் உணர்வும் அகத்திணைப் பாடல்களில் தொடங்கி அண்மைத் திரைப்படம் வரை தமிழர்களால் கொண்டாடப்பட்டுகிறது. அப்படிப்பட்ட காதல் கதை ஒன்றை இயக்குநர்கள் இருவர் இருவேறு வகையில் கையாண்டுள்ளனர். ஒருவர் கே.பாக்யராஜ், இயக்கிய படம் அந்த 7 நாட்கள் (1981); மற்றொருவர் மணிவண்ணன், இயக்கிய படம் இங்கேயும் ஒரு கங்கை (1984). இயக்குநர்கள் இருவரும் பாரதிராஜாவின் சீடர்கள். இரு படங்களிலும் ஒரே சிக்கல். காதலித்த இருவர் பிரிந்துவிடுகிறார்கள். காதலிக்குத் திருமணம் ஆகிவிடுகிறது. கணவரும் வந்துவிடுகிறார்.…
-
மைக்கேல் மார்ஷல் இங்கிலாந்திலிருந்து வெளிவரும் ‘டெவன்’ ஏட்டின் அறிவியல் இதழாளர். ‘தி ஜெனிஸிஸ் க்வஸ்ட்’ (2020) நூலின் ஆசிரியர். கண்டறிதல்களையும் புதிய பார்வைகளையும் அடிப்படையாகக் கொண்ட அறிவியல்பூர்வமான முன்னேற்றமானது நிலைபெற்றுவிட்ட நம்பிக்கைகளைத் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிவருகிறது. அதற்கு, தொல்லியல் துறையும் விதிவிலக்கு அல்ல. வேட்டையாடியும் உணவு சேகரித்தும் வாழ்ந்த காலத்தில், அவர்களிடையே நுண்ணறிவுத்திறன் குறைவாக இருந்தது அல்லது வேளாண்மைக்கும் மையப்படுத்தப்பட்ட அதிகாரத்திற்கும் இடையே காரண-காரியத் தொடர்புள்ளது என்பன போன்ற நீண்ட கால கருத்துகளை இப்போது மறு ஆய்வு செய்ய…